மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு

ஏலத்தில் கலந்துகொள்ள எதிர்ப்பு தெரிவித்ததால் மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-31 16:54 GMT

கந்திலி ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் உள்ள செல்லரைபட்டி ஏரியில் ஆண்டுதோறும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மீன் பிடிக்க ஏலம் விடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஏரியில் மீன் பிடிக்க நேற்று ஊராட்சி அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டது. கடந்த ஆண்டு இந்த ஏரியில் மீன் பிடிக்க ஏலம் எடுத்த குனிச்சி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 44) என்பவர் இந்த ஏலத்தில் கலந்து கொண்டார். அப்போது எலவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் வெளியூர் நபர்கள் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் அருகே உள்ள அரச மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதுபற்றி தகவலறிந்த திருப்பத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று சுமார் 30 நிமிடம் போராடி மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடித்த கோவிந்தராஜை மீட்டு எச்சரித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பின் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் செல்லரைப்பட்டி ஏரியில் மீன் பிடிக்க ரூ.23 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்