சிங்கப்பூரில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது

சிங்கப்பூரில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-09 19:59 GMT

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் சென்று வந்தது தெரியவந்தது. இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்