செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே வெடிகுண்டு வீசி ஒருவர் வெட்டி படுகொலை

செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-07-06 07:38 GMT

சென்னை,

செங்கல்பட்டு நீதிமன்ற வாசல் அருகே குற்ற வழக்கில் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த ஒருவரை ஒரு மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்துள்ளது. அந்த நபரை வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொடூரமான முறையில் அந்த கும்பல் கொலை செய்துள்ளது. கொலை செய்துவிட்டு தப்பியோடிய அந்த கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். செங்கல்பட்டு நீதிமன்ற வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்