ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-02 20:11 GMT

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு

துவரங்குறிச்சியில் உள்ள பூதநாயகி அம்மன் கோவில் அருகே உள்ள நேதாஜி நகரில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ராமசாமி என்பவர் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆக்கிரமிப்பில் உள்ள இந்த வீட்டை அகற்ற சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டதை அடுத்து நேற்று பொன்னம்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர்.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமசாமி திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு நின்றிருந்த போலீசார் மண்எண்ணெய் கேனை பறித்து அவர் மீது தண்ணீர் ஊற்றி தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

அவகாசம்

பின்னர் வருகிற திங்கட்கிழமைக்குள் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள அவகாசம் வழங்கி அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்