அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு லிப்ட்டில் சிக்கிய நபர்.. 1 மணி நேரம் போராடி மீட்பு
சென்னை அண்ணாநகரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள லிப்டில் சிக்கியவரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீட்டனர்.
சென்னை,
சென்னை அண்ணாநகர் பாடிகுப்பத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள லிப்டில் சிக்கியவரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீட்டனர்.
சென்னை அண்ணாநகர் பாடிக்குப்பம் பகுதியில் தமிழக அரசின் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இது கடந்த 2017ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களின் பயன்பாட்டிற்கு வந்தது. பயன்பாட்டிற்கு வந்த 5 ஆண்டுகள் முழுமை பெறாத நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது வீடுகளின் மிகவும் பழுதடைந்து சிதிலமடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.
பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் வீடுகளின் உள்ளேயும் மழைநீர் கொட்டும் உள்ள சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை குடியிருப்பில் உள்ள ஒரு லிப்டில் பாலகிருஷ்ணன் என்பவர் சிக்கிக் கொண்ட நிலையில், அவரை சுமார் 1 மணி நேரம் போராடி மீட்டனர்.