அரியலூரில் ஒருவர் கொரோனாவால் பாதிப்பு
அரியலூரில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையில் இருந்த 4 பேர் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 45 சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேர் மருத்துவமனைகளிலும், மற்றவர்கள் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 246 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.