புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
முக்கூடல் பகுதியில் புகையிலை பொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
முக்கூடல்:
முககூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் தலைமையில் போலீசார் முக்கூடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு அரியநாயகியபுரத்தை சேர்ந்த கோவிந்தன் (வயது 43) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 424 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார்.