புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

பாளையங்கோட்டையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-22 19:22 GMT

பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொட்டாரம் பஸ் நிறுத்தம் அருகில் மூளிகுளத்தை சேர்ந்த கொடிமுத்து (வயது 40) என்பவர் புகையிலை பொருட்களை சிறுவர்களுக்கு விற்பனை செய்ய வைத்து இருந்தாராம். எனவே அவரை போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்