மதுபானம் வைத்திருந்தவர் கைது
உத்தமபாளையம் அருகே மதுபானம் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம் அருகே அம்மாபட்டியில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக உத்தமபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய ஆனந்த் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது ஜெயராஜ் (வயது 61) என்பவர் தனது கடையில் பாட்டில்களை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்த 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.