சரக்கு வேன் மோதி வடமாநிலத்தை சேர்ந்தவர் பலி
சரக்கு வேன் மோதி வடமாநிலத்தை சேர்ந்தவர் பலியானார்.
பீகார் மாநிலம் நாளந்தா பகுதியை சேர்ந்தவர் வீரேந்திர பிரசாத் (வயது 60). இவர், கந்தர்வகோட்டை அருேக புனல்குளத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவர் தொழிற்சாலையின் அருகே உள்ள பாலத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தஞ்சாவூரில் இருந்து வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக வீரேந்திர பிரசாத் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வீரேந்திர பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் சரக்கு வேன் டிரைவர் மதுரை செந்தில் ஆண்டவர் தெருவை சேர்ந்த தங்கம் (49) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.