எந்திரந்தில் சிக்கி வாலிபர் சாவு

எந்திரந்தில் சிக்கி வாலிபர் சாவு

Update: 2023-10-05 10:59 GMT

அனுப்பர்பாளையம்,

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராம் (வயது 28). இவர் திருப்பூரை அடுத்த காவிலிபாளையம்புதூர் பகுதியில் உள்ள பனியன் காம்பாக்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் இரவுப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தூக்க கலக்கத்தில் ராம் திடீரென எந்திரத்தில் தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

--------------

Tags:    

மேலும் செய்திகள்