பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்

மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2022-09-27 18:45 GMT

மயிலாடுதுறையில் தமிழக நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் எம்.சி.ராஜா தலைமை தாக்கினார். மாவட்ட ஆட்சி மன்றக்குழு செயலாளர் சந்தோஷ் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் முனுசாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் அன்வர்சுல்தான், ரமேஷ், ராஜாராமன், ஜெயசங்கர், லெட்சுமிகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் அதிவேகமாக வாகனங்களை இயக்கி விபத்துகளை ஏற்படுத்தும் வாகனஓட்டிகளுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலாடுதுறை நகராட்சியில் பாதாளசாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். சேதமடைந்துள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. முடிவில், மாவட்ட இணை அமைப்பாளர் லெட்சுமணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்