தோகையை விரித்து நடனமாடிய மயில்
தோகையை விரித்து நடனமாடிய மயிலை கிராம மக்கள் கண்டு ரசித்தனர்.
குன்னூர்,
குன்னூர் அருகே அருவங்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வனப்பகுதி அதிகமாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்து உள்ளது. இந்தநிலையில் ஜெகதளா கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து 5-க்கும் மேற்பட்ட மயில்கள் வந்து உள்ளன. இந்த மயில்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் கிராம பகுதியில் முகாமிட்டு, உணவை தேடி உட்கொண்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று ஜெகதளா கிராமத்தில் ஒரு மயில் தோகையை விரித்து நடனம் ஆடியது. இதனை கிராம மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு கண்டு ரசித்தனர். மேலும் செல்போனில் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.