சப்-கலெக்டர் தலைமையில் அமைதி கூட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு சம்பந்தமாக சப்-கலெக்டர் தலைமையில் அமைதி கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-11 16:13 GMT

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், வெள்ளநாயனக்கனேரி பகுதியில் தீண்டாமை முள்வேலியை அகற்றாமல் தாழ்த்தப்பட்டவர்களை வஞ்சிக்கும் மாவட்ட வருவாய் துறையையும் மாவட்ட காவல் துறையையும் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் சப்- கலெக்டர் அலுவலகத்தில் சப்- கலெக்டர் பானு தலைமையில் அமைதி கூட்டம் நடைபெற்றது. நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரா.சுபாஷ்சந்திர போஸ், வாணியம்பாடி தொகுதி செயலாளர் பார்த்திபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

வெள்ளநாயக்கனேரி கிராமத்தை சேர்ந்த சுமார் 15 குடும்பங்கள் சென்றுவர பாதை அமைத்துத்தர உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதை ஏற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்