குளச்சல்:
குளச்சல் அருகே களிமாரை சேர்ந்தவர் முருகன் (வயது 73), பெயிண்டர். இவர் தற்போது வி.கே.பி. பள்ளியருகில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை அவர் குளச்சல் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு செல்ல மண்டைக்காடு செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தார். பஸ் அண்ணாசிலை சந்திப்பை கடந்து சிறிது தூரம் சென்றதும் இருக்கையிலிருந்த முருகன் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த கண்டக்டர் பஸ்சை நிறுத்தினார்.
உடனே த.மு.மு.க. ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குளச்சல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து விட்டு முருகன் மாரடைப்பால் இறந்து விட்டார் என கூறினார்கள். முருகன் திடீர் சாவு குறித்து தகவலறிந்ததும், அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து முருகன் உடலை பெற்று சென்றனர்.