மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிவரும் பூங்கா

தஞ்சை சீனிவாசபுரம் பகுதியில் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிவரும் பூங்காவை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-06-12 21:29 GMT

தஞ்சை சீனிவாசபுரம் பகுதியில் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிவரும் பூங்காவை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பூங்கா

தஞ்சை சீனிவாசபுரம் பகுதியில் ராஜன் ரோடு முதல் பிரிவு சாலையோரத்தில் சிறிய அளவிலான பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா செயற்கை நீறுற்று, நடைபாதை, இருக்கைகள், மின்விளக்குகள் பொருத்தப்பட்டு அழகாக காட்சி அளித்து வந்தது.

இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பூங்காவில் அமர்ந்து இளைப்பாறி சென்று வந்தனர். பூங்காவின் எதிரே தொடக்கப்பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகளும் பூங்காவை பயன்படுத்தி வந்தனர்.

மதுப்பிரியர்களின் கூடாரம்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பூங்கா முறையாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனை பயன்படுத்திக்கொண்டு இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் பூங்கா மற்றும் சாலையோரத்தில் அமர்ந்து மது அருந்துகிறார்கள்.

இதனால் காலை பூங்கா முழுவதும் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவு பொட்டலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த பூங்கா மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது.இதன்காரணமாக பூங்காவுக்கு வருபவர்கள் முகம் சுழித்தபடி செல்கின்றனர். நாளடைவில் பெரும்பாலான பொதுமக்கள் பூங்காவை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டனர்.

நடவடிக்கை

இதனால் பூங்கா தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பூங்காவில் மது அருந்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்காவை பராமரித்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Tags:    

மேலும் செய்திகள்