கொங்கர்பாளையத்தில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தைப்புலி

கொங்கர்பாளையத்தில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் சிறுத்தைப்புலி நடமாட்டம் பதிவாகி இருந்தது. அதனை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Update: 2023-07-25 00:16 GMT

டி.என்.பாளையம்

கொங்கர்பாளையத்தில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் சிறுத்தைப்புலி நடமாட்டம் பதிவாகி இருந்தது. அதனை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தைப்புலி

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம் சமனாங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி.

கடந்த 22-ந் தேதி இவருடைய தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியை சிறுத்தைப்புலி கடித்து கொன்றது. மேலும் கன்றுக்குட்டியின் உடல் அந்த பகுதியில் உள்ள சோளக்காட்டில் கிடந்தது.

இதைத்தொடர்ந்து டி.என்.பாளையம் வனத்துறையினர் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க ராமசாமி தோட்டப்பகுதியில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர்.

கண்காணிப்பு கேமராவில்...

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமசாமி தோட்டப்பகுதிக்கு வந்த சிறுத்தைப்புலியானது, சோளக்காட்டில் மீதம் கிடந்த கன்றுக்குட்டியின் உடலை தூக்கி சென்றுவிட்டது. இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தைப்புலியின் நடமாட்டம் பதிவாகி இருந்தது. இதனை வனத்துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க உரிய நடவடிக்கையை வனத்துறையினர் எடுத்து வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்