ஐகோர்ட்டு நீதிபதிகள் குழு ஆய்வு

குதிரைவண்டி கோர்ட்டு கட்டிடம் புனரமைப்பு பணியை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்

Update: 2022-07-23 13:17 GMT

குதிரைவண்டி கோர்ட்டு கட்டிடம் புனரமைப்பு பணியை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

ரூ.9 கோடியில் புனரமைப்பு

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே நூற்றாண்டு பழமையான குதிரை வண்டி கோர்ட்டு கட்டிடம் உள்ளது. இது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோர்ட்டாக செயல் பட்டது.

பின்னர் இடப்பற்றாக்குறை காரணமாக கோர்ட்டுகள் அனைத்தும் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்திற்கு மாற்றப்பட்டன. 130 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குதிரைவண்டி கோர்ட்டு கட்டிடம் சிதிலமடைந்தது. எனவே அதை புனரமைக்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

நீதிபதிகள் குழு

அந்த நிதியின் மூலம் பழமை மாறாமல் புதிய தொழில்நுட்பத் தை பயன்படுத்தி குதிரைவண்டி கோர்ட்டு கட்டிடம் புனரமைக் கப்பட்டு வருகிறது. அந்த கட்டிடம் கட்டுவதற்கு சுண்ணாம்பு கலவை, கடுக்காய் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. கோர்ட்டு கட்டிடத்தை சுற்றிலும் பிரமாண்ட தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாரம்பரிய கட்டிடங்களை புதுப்பிப்பதற்காக அமைக்கப்பட்டு உள்ள ஐகோர்ட்டு பாரம்பரிய கட்டிட குழு தலைவரும், நீதிபதியுமான வேலுமணி தலைமையில் குழு உறுப்பினர்கள் நேற்று காலை கோவை குதிரைவண்டி கோர்ட்டு கட்டிட புனரமைப்பு பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆலோசனை கூட்டம்

அவர்கள், கட்டுமான பணியை உரிய காலத்தில் முடிக்க வேண் டும் என்று அறிவுறுத்தினர். மேலும் அங்கிருந்த பொறியாளர்களி டம் கட்டிட வரைபடம், கட்டிடம் கட்ட பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தனர்.

அதைத்தொடர்ந்து கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஐகோர்ட்டு நீதிபதி வேலுமணி, கலெக்டர் சமீரன், மாவட்ட நீதிபதி, வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்