பெத்தநாயக்கன்பாளையம் அருகே பிறந்து ஒரே நாளான ஆண் சிசு ஓடையில் வீச்சு
பெத்தநாயக்கன்பாளையம் அருகே பிறந்து ஒரே நாளான ஆண் சிசு ஓடையில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெத்தநாயக்கன்பாளையம்:
பெத்தநாயக்கன்பாளையம் அருகே வெள்ளாளப்பட்டி ஆலமரத்து காடு பஸ் நிறுத்த பகுதியில் உள்ள ஓடையில் பிறந்து ஒரே நாளான ஆண் சிசு வீசப்பட்டு இறந்து கிடப்பதாக ஏத்தாப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் ஆண் சிசுசை மீட்டனர். இதுகுறித்து போலீசார் ஆண் சிசுவை ஓடையில் வீசி சென்ற மர்ம நபர்கள் யார்? என தேடி வருகின்றனர்.