பாலமேடு அருகே உலக நன்மைக்காக கோவிலில் அசைவ விருந்து படையல்
பாலமேடு அருகே உலக நன்மைக்காக கோவிலில் அசைவ விருந்து படையலில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
அலங்காநல்லூர்
பாலமேடு அருகே உலக நன்மைக்காக கோவிலில் அசைவ விருந்து படையலில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
சாத்தா கோவில்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது அரசம்பட்டி மலை அடிவார கிராமம். இங்கு விவசாயம் செழிக்க வேண்டியும், பில்லி, சூனியம் நீங்க வேண்டியும், உலக நன்மைக்காகவும், உலக மக்கள் நலமாக வாழ வேண்டியும் வருடந்தோறும் புரட்டாசி மாதம், ஸ்ரீ சாத்தா கோவிலில் கோழி, சேவல், ஆடுகளை பக்தர்கள் நேர்த்திகடனாக வழங்கி சாமிக்கு படையலிட்டு தரிசனம் செய்வது வழக்கம்.
அதன்படி இந்த வருடமும் அசைவ விருந்து படையல் நடந்தது. இதில் பொதுமக்களுக்கு அசைவ உணவு விருந்து வழங்கப்பட்டது.
தரிசனம்
திருவிழாவில் மதுரை, திண்டுக்கல், மாவட்ட பகுதியை சேர்ந்த பத்தர்களும் மற்றும் சுற்றுவட்டார 18 கிராம மக்களும் ஸ்ரீசாத்தா சாமியை தரிசனம் செய்து மாலைகளை காணிக்கையாக வழங்கி தரிசனம் செய்தனர்.