செயல்படாத ெகடிகாரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

செயல்படாத ெகடிகாரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

Update: 2023-03-26 19:38 GMT

கும்பகோணம் கோர்ட்டு ரவுண்டானா பகுதியில் செயல்படாத கெடிகாரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செயல்படாத கெடிகாரம்

கும்பகோணத்தில் பக்தபுரி ரவுண்டானா பகுதி உள்ளது. இதனை சுற்றி பல்வேறு அரசு அலுவலகங்கள், கோர்ட்டு, அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி, கும்பகோணம் அரசினர் தன்னாட்சி கல்லூரி உள்ளிட்டவை அமைந்துள்ளது. தினமும் இந்த பகுதி வழியாக திரளான பொதுமக்களும், மாணவ- மாணவிகளும் கடந்து செல்கின்றனர். இந்த பகுதியில் உள்ள ரவுண்டானாவில் அமைக்கப்பட்டுள்ள மணிக்கூண்டில் பொருத்தப்பட்டுள்ள கெடிகாரம் கடந்த பல ஆண்டுகளாக செயல்படாமல் பழுதடைந்து காணப்படுகிறது.

பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

இதனால் அந்த பகுதியில் பஸ்சுக்கு காத்து நிற்கும் பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் சரியான நேரம் தெரியாமலும், செயல்படாத கெடிகாரத்தை பார்த்தும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்படாமல் உள்ள கெடிகாரத்தை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்