புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்

நாகூர் எம்.ஜி.ஆர். நகரில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைத்துத்தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-20 18:45 GMT

நாகூர்:

நாகூர் எம்.ஜி.ஆர். நகரில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைத்துத்தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த மின்கம்பம்

நாகூர் எம்.ஜி.ஆர். நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த எம்.ஜி.ஆர். நகர் சாலை ஓரத்தில் உள்ள ஒரு மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. மேலும் இந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்த மின்கம்பம் சேதமடைந்து பல மாதங்களாகியும் மாற்றப்படாமல் அங்கேயே இருக்கிறது.

இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் அந்த குடியிருப்பு பகுதியில் ஏராளமான குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகள் அந்த பகுதியில் தான் விளையாடுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படுமோ என்று குழந்தைகளின் பெற்றோர்கள் பரிதவிக்கின்றனர்.

புதிதாக அமைத்து தர வேண்டும்

மேலும் சேதமடைந்த மின் கம்பத்தில் செடி கொடிகள் சூழ்ந்து காணப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்பு மேற்கண்ட பகுதியில் உள்ள சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்