அரபிக்கடல் பகுதிகளில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...!

அரபிக்கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

Update: 2022-12-12 08:50 GMT

சென்னை,

வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களை சந்தித்து கூறியதாவது,

தெற்கு கர்நாடக கடற்கரை பகுதிகள் வழியாக தென்கிழக்கு அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்லும். நாளை தென்கிழக்கு அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்.

இதுவரும் தினங்களில் மேற்கு வடமேற்கு திசையில நகர்ந்து இந்திய கடற்பகுதிகளை விட்டு விலகிச்செல்லும். அந்தமான் கிழக்குப்பகுதியில் இருந்து நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி நகர்ந்து அந்தமான் கடல்பகுதிகளின் தெற்குப்பகுதிகளில் நிலவக்கூடும்.

இதனால் அடுத்த 24 நேரங்களை பொறுத்தவரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடகடலோ மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும், வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்