புதிய மயான கொட்டகை கட்டி தர வேண்டும்

கொள்ளிடம் அருகே கொன்னகாட்டுப்படுகையில் இடிந்து விழுந்த மயான கொட்டகையை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-30 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே கொன்னகாட்டுப்படுகையில் இடிந்து விழுந்த மயான கொட்டகையை அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயான கொட்டகை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொன்னகாட்டுபடுகை கிராமம் உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள இந்த கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கான மயானம் கிராமத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த பொது மயானத்தில்தான் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தும், எரியூட்டியும் வருகின்றனர். இங்கு 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மயான ஏரியூட்டு கொட்டகை இடிந்து விழுந்து 3 மாத காலம் ஆகிவிட்டது. ஆனால் அதற்கு பதிலாக எரியூட்டு கொட்டகை கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதியை சேர்ந்த கிராமமக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

கலெக்டரிடம் மனு

வயது முதிர்ந்தவர்கள் யாராவது இறந்து விட்டால் உடலை அங்கு எரியூட்ட முற்படும் போது மழை வந்தால் உடலை பாதுகாப்பாக ஏரியூட்ட முடியாத சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து கொன்னகாட்டுப்படுகை கிராம மக்கள் கூறியதாவது. இந்த மயான எரியூட்டு கொட்டகையை கட்ட கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இறந்தவர்களை பாதுகாப்பாக எரியூட்டும் வகையில் புதிய மயான கொட்டகை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்