புதிய மின்கம்பம் நடப்பட்டது

கிணத்துக்கடவு அருகே பழுதடைந்த மின்கம்பம் இருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக புதிய மின்கம்பம் நடப்பட்டது.

Update: 2022-09-16 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே பழுதடைந்த மின்கம்பம் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக புதிய மின்கம்பம் நடப்பட்டது.

பழுதடைந்த மின்கம்பம்

கிணத்துக்கடவு அருகே பகவதிபாளையம் செல்லும் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் இருந்தது. அந்த மின்கம்பம் அடிப்பாகத்தில் இருந்து மேல் பகுதி வரை பழுதடைந்து, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மின்கம்பம் கீழே விழக்கூடிய அபாயகரமான நிலையில் காணப்பட்டது.

இந்த சாலை வழியாக கிணத்துக்கடவு, பகவதிபாளையம், நெம்பர் 10 முத்தூர், சங்கராயபுரம் உள்பட பல ஊர்களுக்கும் விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்று வருகின்றனர்.

மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்களும் தினமும் சென்று வருகின்றன. பழுதடைந்த மின்கம்பத்தால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வந்தனர். சாலையோரம் பழுதடைந்த நிலையில் நின்ற மின் கம்பம் குறித்து, தினத்தந்தியில் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி படத்துடன் செய்தி வெளியானது.

மாற்றி நடவடிக்கை

இதையடுத்து கிணத்துக்கடவு மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பழுதடைந்த மின்கம்பத்தை பார்வையிட்டனர்.

பின்னர் உடனடியாக பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி சாலை ஓரத்தில் அபாயகரமாக இருந்த மின்கம்பம், மின்வாரிய பணியாளர்கள் மூலம் உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் அகற்றினார்கள்.

மேலும் அதற்கு பதிலாக புதிய மின்கம்பம் நடப்பட்டது.

பழுதடைந்த நிலையில் நின்ற மின்கம்பத்தை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும், பொதுமக்கள் நலன் குறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கம் பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்