கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள் பறிப்பு
கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள் பறித்தவர் கைது செய்யப்பட்டார்
மதுரை புதூர் பரசுராம்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 24). இவர் மோட்டார் சைக்கிளில் புதூர் ஐ.டி.ஐ. வழியாக சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டு தப்பிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதூர் சம்பக்குளத்தை சேர்ந்த பாண்டியராஜ் என்ற அருண் (27) என்பவரை கைது செய்தனர்.