வங்கி முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு

ஆரணியில் வங்கி முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு

Update: 2022-07-09 17:12 GMT

ஆரணி

ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன். இவர் தனது மனைவி பட்டு என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆரணி மண்டி வீதியில் உள்ள வங்கிக்கு சென்றார்.

அங்கு வங்கி முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு வங்கிக்கு சென்று விட்டு மீண்டும் வெளியே வந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மோட்டார்சைக்கிள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை பார்த்தபோது மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளை திருடிச் செல்வது தெரியவந்தது.

இது சம்பந்தமாக ஆரணி டவுன் போலீசில் பூவரசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்