டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2023-09-02 18:28 GMT

லாலாபேட்டை அருகே உள்ள செல்லாண்டிபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). இவர் காணியாளம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக செல்லாண்டிபுரம் பகுதியில் கரும்பு ஏற்ற நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மணிகண்டன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்