பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன வாசிக்கும் கருவி

ராணிப்பேட்டை மாவட்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன வாசிக்கும் கருவி வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-24 18:59 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நவீன வாசிக்கும் கருவி வழங்கப்பட இருக்கிறது. இன்டர்நெட் ரேடியோ, யூ.எஸ்.பி. பென்டிரைவ் மற்றும் எஸ்.டி.கார்டு சேமிக்கும் வசதி, தமிழ் உள்பட மற்ற மொழிகளில் படிக்க உதவும் வசதி, நெட்வொர்க் இணைப்பு, செல்போனில் ஹாட்ஸ்பாட் உடன் இணைக்கும் வசதி, டேய்சி புத்தகங்களை பதிவேற்றம் செய்தல், மின் புத்தகங்கள், வீடியோக்கள் ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தி நேரடியாக பதிவிறக்கம் செய்தல், குரல் குறிப்புகள் மற்றும் உரை குறிப்புகளை பதிவு செய்யும் வசதி, பார்வையற்றவர்களால் பயன்படுத்த எளிதான தொட்டுணரக்கூடிய பொத்தான்கள் மற்றும் அனைத்து தரப்பு பைல்களை எளிதாகப்படிக்கவும், பேசக்கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய பொத்தான்கள் ஆகிய வசதிகள் கொண்ட நவீன வாசிக்கும் கருவி வழங்கப்பட உள்ளது.

இத்தகைய வசதிகள் கொண்ட நவீன வாசிக்கும் கருவி பெற தகுதியான பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

எனவே, இது தொடர்பான விண்ணப்பத்தினை ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்