பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் முக கவசம் வழங்கும் நவீன எந்திரம்
கோவை ரெயில் நிலையத்தில் பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் முக கவசம் வழங்கும் நவீன எந்திரம் வைக்கப்பட்டு உள்ளது
கோவை ரெயில் நிலையத்தில் பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் முக கவசம் வழங்கும் நவீன எந்திரம் வைக்கப்பட்டு உள்ளது.
நவீன எந்திரம்
கோவை ரெயில் நிலையத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான ரெயில்கள் வந்து செல்கின்றன.
இங்கு வரும் பயணிகள் அங்குள்ள கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி குடிக்கிறார்கள்.
பின்னர் காலி பாட்டில்களை ஆங்காங்கே சிலர் தூக்கி வீசிவிட்டு செல்கிறார்கள். இதனால் பிளாஸ்டிக் காலி பாட்டில்கள் அதிக அளவில் குவிவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
முகக்கவசம் இலவசம்
அதை தடுக்க கோவை ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது நடை மேடையில் ஒரு நவீன எந்திரம் வைக்கப்பட்டு உள்ளது. அதில் காலி பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் முகக்கவசம் வரும்.
அதை எடுத்து இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். முகக்கவசம் வேண்டாம் என்றால், நமது எடையை சரிபார்த்துக் கொள்ளும் வசதியும் அங்கு உள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க அந்த எந்திரம் வைக்கப் பட்டு உள்ளது.
வரவேற்பு
இந்த நவீன எந்திரம் குறித்து ரெயில்நிலைய அதிகாரிகள் கூறுகை யில், இந்த நவீன எந்திரத்தில் காலி பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால் அது 30 வினாடிக்குள் தூளாகி விடும்.
அந்த தூள் நூலாக மாற்றப்பட்டு பனியன் தயாரிக்க அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த எந்திரத்துக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
இதன் மூலம் ரெயில் நிலையத்தில் காலி பாட்டில்கள் வீசப்படுவது தவிர்க்கப்படும் என்றனர்.