நடமாடும் இ-சேவை வாகனம்

மயிலாடுதுறையில் நடமாடும் இ-சேவை மையத்தை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-13 18:45 GMT


மயிலாடுதுறையில் நடமாடும் இ-சேவை மையத்தை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

நடமாடும் இ-சேவை மையம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடமாடும் இ- சேவை வாகனம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி கலந்து கொண்டு இ- சேவை வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் சேவைகள் கிராமங்கள் தோறும் அனைத்து மக்களுக்கும் எளிதில் கிடைத்திடும் வகையில் நமது மாவட்டத்திற்கு நடமாடும் இ- சேவை வாகனம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசின் சேவைகள் கிராமப்புற மக்களுக்கு எளிதில் சென்றடைய இந்த இ- சேவை வாகனம் உதவியாக இருக்கும்.

ஒலிப்பெருக்கி

கணினி பயிற்சி கூடம், சேவைகளை பார்வையிட காணொளி வசதி, திட்டங்களை அறிவிக்க ஒலிப்பெருக்கி வசதி, இணைய சேவை வசதி, ஜெனரேட்டர் வசதி கொண்ட மின்சார வசதி ஆகியவை இந்த வாகனத்தின் சிறப்பம்சங்கள் ஆகும். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் பான்கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒப்புகை சீட்டுகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில், மயிலாடுதுறை பொது சேவை மைய மேலாளர் பிரபாகரன், நடமாடும் சேவை மைய நிர்வாகிகள் சம்பத், மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்