காணாமல் போன இளம்பெண் கிணற்றில் பிணமாக மிதந்தார்
ராதாபுரம் அருகே காணாமல் போன இளம்பெண் கிணற்றில் பிணமாக மிதந்தார்.
ராதாபுரம்:
ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தை சேர்ந்த அர்ச்சுனன் மகள் சங்கீதா (வயது 20). இவர் கடந்த சில நாட்களுக்கு காணாமல் போனார். இதுகுறித்த புகாரின் பேரில் ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை பரமேஸ்வரபுரம் அருகே ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் பெண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மேலும் இதுபற்றிய தகவலின் பேரில் வள்ளியூர் தீயணைப்பு துறையினர் வந்து பிணத்தை மீட்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் காணாமல் போன சங்கீதா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்டீபன் ஜோன்ஸ் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்.