தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் வாயிற் கூட்டம்
தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் வாயிற் கூட்டம் நடந்தது.
புகழூர் காகித ஆலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் வாயிற் கூட்டம் காகித ஆலை 4-வது கேட் அருகே நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் அண்ணாவேலு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் கலந்து கொண்டு தொழிலாளர்களிடையே காகித ஆலையின் செயல்பாடு குறித்தும், காகித ஆலை சார்பில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட போனஸ் குறித்தும் சிறப்புரையாற்றினார். இதில் காகித ஆலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.