கவுன்சிலர்கள் கூட்டம்
வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில்கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் ராமமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பிரின்ஸ், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலாளர் செந்தில் 36 தீர்மானங்களை வாசித்தார்.