அய்யன்கொல்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
அய்யன்கொல்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
பந்தலூர்
பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில், வயநாடன் செட்டி சர்வீஸ் சொசைட்டி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை இணைந்து சிறப்பு முகாமினை நடத்தினார்கள். சங்க தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். சேரங்கோடு ஊராட்சி தலைவர் லில்லி ஏலியாஸ், துணை தலைவர் சந்திரபோஸ், மாற்றுதினாளிகள் சங்க தலைவர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வயநாடன் செட்டி சமுதாயமக்களுக்கு சிக்கில் செல் அனீமியா பாதித்தவர்களுக்கான சிறப்பு பரிசோதனை, மருத்துவ ஆலோசனை அடையாள அட்டை வழங்குதல், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை புதிய அட்டை வழங்கப்பட்டது. கூடலூர் அரசு ஆஸ்பத்திரி சிறப்பு எழும்புமுறிவு பிரிவு டாக்டர் பராஸ்வரன் மற்றும் அனைத்து பிரிவு சிறப்பு டாக்டர்கள் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். மாவட்ட மாற்று திறனாளிகள் அலுவலர் மலர்விழி மற்றும் அலுவலக பணியாளர்கள் சங்க துணைதலைவர் விஜயன் செயலாளர், சண்முகம் நிர்வாகிகள் சுரேந்திரன், கோபி, பிரபாகரன், சதீஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் திருவாசகம் நன்றி கூறினார்.