திருமருகலில் மீன், இறைச்சி விற்பனை செய்ய சந்தை அமைத்துத்தர வேண்டும்

சாலையோரங்களில் வியாபாரம் செய்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. திருமருகலில் மீன், இறைச்சி விற்பனை செய்ய சந்தை அமைத்துத்தர வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-12 18:45 GMT

திட்டச்சேரி:

சாலையோரங்களில் வியாபாரம் செய்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. திருமருகலில் மீன், இறைச்சி விற்பனை செய்ய சந்தை அமைத்துத்தர வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையோரத்தில் வியாபாரம்

திருமருகல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மீன் மற்றும் இறைச்சி ஆகியவற்றை வாங்குவதற்கு திருமருகல் வந்து செல்கின்றனர். மீன், இறைச்சி உள்ளிட்டவைகள் விற்பனை செய்ய இடம் இல்லாமல் வியாபாரிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இடம் இல்லாததால் சாலை ஓரங்களில் வைத்து வியாபாரம் செய்யும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு..

இதனால் மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்ய முடியாமல் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீன், கோழி, ஆட்டு இறைச்சி ஆகியவற்றை விற்பனை செய்ய திருமருகலில் சந்தை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்