கடல்சார் விழிப்புணர்வு வாகன பயணம் நெல்லை வந்தது

இந்திய கடற்படையில் கடல்சார் விழிப்புணர்வு வாகன பயணம் நெல்லை வந்தது.

Update: 2023-04-03 20:16 GMT

இந்திய கடற்படை சார்பில் கடற்படையின் சிறப்புகள் குறித்தும், கப்பல்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் 36 வண்டிகளில் கடல்சார் விழிப்புணர்வு வாகன பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் கடற்சார்ந்த பகுதிகளில் தங்கள் பயணங்களை மேற்கொண்டு அங்குள்ள ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களில் சமூக பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள். முதல்கட்டமாக கடந்த மாதம் 26-ந்தேதி கொல்கத்தாவில் தொடங்கி அங்கிருந்து விசாகப்பட்டினத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து 2-வது கட்டமாக விசாகப்பட்டினத்தில் தொடங்கி நேற்று மாலையில் நெல்லைக்கு வந்தடைந்தது. அவர்களுக்கு விஜயநாராயணத்தில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தளத்தின் தலைமை செயல் அதிகாரி நிஷாந்த் குமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 36 வண்டிகளில் 30 கடற்படை அதிகாரிகள், 3 தன்னார்வலர்கள், 3 முன்னாள் ராணுவ வீரர்கள் என 36 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நெல்லையில் இருந்து புறப்பட்டு ஜம்மு-காஷ்மீரில் முடிவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்