போடிமெட்டு மலைப்பகுதியில் கிடந்த ஆண் பிணம்

போடிமெட்டு மலைப்பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.

Update: 2022-12-20 18:45 GMT

போடிமெட்டு மலைப்பகுதியில் 8-வது கொண்டை ஊசி வளைவு அருகே புதர்மண்டிய பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பாா்த்து குரங்கணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்