காவிரி ஆற்றில் மிதந்து வந்த ஆண் பிணம்

காவிரி ஆற்றில் மிதந்து வந்த ஆண் பிணம் கிடந்தது.

Update: 2022-07-10 18:26 GMT

நொய்யல் அருகே மரவாபாளையம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்து வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கொம்பு பாளையம் கிராம நிர்வாக அலுவலர் காயத்திரி வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பின்னர் அந்த ஆணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்