தென்பெண்ணை ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
மணலூர்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.
திருக்கோவிலூர்:
மணலூர்பேட்டை அருகே மேலந்தல் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அய்யனார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.