கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
ஆரணி அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி
ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராட்டினமங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? ஏன் இங்கு வந்தார், தானாக விழுந்து இறந்தாரா, கொலை செய்யப்பட்டு வீசப்பட்டரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.