ஆயுதத்துடன் திரிந்தவர் கைது
திருத்தங்கலில் ஆயுதத்துடன் திரிந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் நாகமணி மற்றும் போலீசார் ஆலாவூரணி அண்ணா காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பவுன்ராஜ் மகன் மகாராஜா என்கிற வெள்ளையன் (வயது 30) என்பவர் கையில் வாளுடன் திரிந்துள்ளார். இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் ஆயுதத்தை பறிமுதல் செய்தனர்.