3 மாதங்கள் தலைமறைவாக இருந்தவர் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 3 மாதங்கள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-31 19:20 GMT

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் அனைத்தலையூர் நடுத்தெருவை சேர்ந்த ஆறுமுகநயினார் (வயது 56) என்பவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் விசாரணைக்கு கடந்த 3 மாதங்களாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு நெல்லை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இந்த நிலையில் கங்கைகொண்டான் போலீசார் நேற்று ஆறுமுகநயினாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்