கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது
கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 29). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை குளித்தலை ரெயில் நிலைய சாலையில் நிறுத்தி வைத்துள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளை அவர் எடுக்க முயன்றபோது அங்கு வந்த திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த நவீன் குமார் (27) என்பவர் கோபியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். அப்போது கோபி சத்தம் போடவே அருகில் உள்ளவர்கள் வருவதை பார்த்த நவீன்குமார் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, நவீன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.