மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

ஆற்காட்டில் மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-24 18:39 GMT

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் போலீசார் ஆற்காட்டில் உள்ள செய்யாறு சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் அவர் ஆற்காடு அடுத்த மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கண்ணாயிரம் (வயது 62), என்பதும், மோட்டார் சைக்கிளில் பையில் மறைத்து சுமார் 14 கிலோ எடை கொண்ட தடை ெசய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்