ஓட்டலில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது

ஓட்டலில் பெண்களை வைத்து விபசாரம் நடத்தியவர் கைது செய்தனர்.

Update: 2023-09-08 19:30 GMT

சூளகிரி:-

சூளகிரி அருகே கொல்லப்பள்ளி பகுதியில் சூளகிரி போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். சுண்டகிரி அருகே ஒரு தனியார் ஓட்டலில் 'ஸ்பா' என்ற பெயரில் பெண்களை வைத்து ஒருவர் விபசாரம் செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அங்குள்ள தனியார் ஓட்டலின் கீழ்தளத்தில் 'ஆலிவ் ஸ்பா' என்ற பெயரில் உள்ள மசாஜ் சென்டரின் உள்ளே கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த சந்தோஷ் (44| என்பவர் 2 பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது. உடனே போலீசார் சந்தோசை கைது செய்து அவரிடம் இருந்து 2 பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்