நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
ஆலங்காயம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
ஆலங்காயத்தை அடுத்த பங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவர் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் ஆலங்காயம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் பிரேம்ஜி, கோவிந்தசாமி ஆகியோர் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது முருகேசனின் மாட்டுக்கொட்டகையில் ஒற்றைக்குழல் நாட்டு துப்பாக்கி ஒன்று இருந்தது தெரிய வந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து முருகேசன்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.