கத்தியை காட்டி மிரட்டி முதியவரிடம் பணம் பறித்தவர் கைது
கத்தியை காட்டி மிரட்டி முதியவரிடம் பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 68). இவர் நேற்று முன்தினம் காலை ஜெயங்கொண்டம் செல்வதற்காக கங்கைகொண்ட சோழபுரம் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி ராமானுஜம் வைத்திருந்த ரூ.200-ஐ பறித்து கொண்டு தப்பி சென்றார். இது குறித்து ராமானுஜம் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், கடலூர் மாவட்டம் பழஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஜோதி (42) என்பவர் முதியவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.