போலீஸ் என கூறி கஞ்சா சோதனை செய்வதுபோல் நடித்து பணம் பறித்தவர் கைது

போலீஸ் என கூறி ேமாட்டார்சைக்கிளில் சென்ற எலக்ட்ரீஷியனை மறித்து பணம் பறித்து தப்பியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-11 17:48 GMT

செய்யாறு

போலீஸ் என கூறி ேமாட்டார்சைக்கிளில் சென்ற எலக்ட்ரீஷியனை மறித்து பணம் பறித்து தப்பியவரை போலீசார் கைது செய்தனர்.

எலக்ட்ரீஷியன்

செய்யாறு தாலுகா சுண்டிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கருணா (வயது 39). எலக்ட்ரீஷயனான இவர் நேற்று காலை 7 மணியளவில் செய்யாறிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிள் சென்றபோது டிப் டாப் உடை அணிந்த ஒருவர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார்.அப்போது 'நான் செய்யாறு போலீஸ்காரர்' என்று கூறிய அவர் கஞ்சா சோதனை செய்து கொண்டிருக்கிறேன். ஏதாவது பாக்கெட்டில் கஞ்சா வைத்திருக்கிறாயா? எனக்கேட்டு சோதனை செய்வது போல் செய்தார்.

அப்போது அந்த நபர் கருணா அணிந்திருந்த கவரிங் நகையை அறுத்துக் கொண்டதோடு பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்து 300-ஐ பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினார்.

இது குறித்து கருணா கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது

இதில் வழிப்பறியில் ஈடுபட்டவர் முருகன் (45) என்பதும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா திருவாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தூசி அருகே இதுபோன்ற ஒரு சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அந்த சம்பவத்திலும் வேறு இடங்களில் இதுபோன்று இவர் ஈடுபட்டாரா என்பது குறித்து கைதான முருகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்