திருவள்ளூர் அருகே லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயம்
திருவள்ளூர் அருகே லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயம் அடைந்தார்.
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவர் நேற்று முன்தினம் காலை திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் மகளை விட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சி.டி.எச் சாலையில் வரும்போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் மணிகண்டனுக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மணிகண்டன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.